2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது டிசம்பர் 21 முதல் தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதி முதல் தொடங்க நடைபெற்றுவருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் சர்வீசஸ் அணியை எதிர்த்து மகாராஷ்டிரா அணி விளையாடியது.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சர்வீசஸ் அணி மகாராஷ்டிரா பவுலர்களை சமாளிக்க முடியாமல் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 20 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய அபராமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் 74 பந்துகளில் 16 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் என பறக்கவிட்டு 148 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டு போட்டிகளையும் வென்றுள்ள மகாராஷ்டிரா அணி குரூப் பி பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.