rr vs mi cricinfo
கிரிக்கெட்

RR பிளேஆஃப் செல்வதில் சிக்கல்.. அடுத்தடுத்து சரிந்த 3 விக்கெட்டுகள்!

மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக தொடங்கியுள்ளது.

Rishan Vengai

2026 ஐபிஎல் லீக் கட்டத்தின் இறுதியில், பிளேஆஃப் சுற்றுக்கான கடைசி இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. 15 புள்ளிகளுடன் பஞ்சாப் முன்னிலையில் இருக்க, 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி மும்பையை எதிர்த்து அவசியமான போட்டியில் விளையாடுகிறது. வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, கேப்டன் ரியான் பராக் ஆகியோர் விரைவில் அவுட்டாகி, 7 ஓவரில் 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் சிக்கலில் சிக்கியுள்ளது.

2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் முதலிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி 1 இடத்திற்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.

PBKS 2026

பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்துவரும் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி விரைவாகவே வெளியேறிவிட்டனர். அடுத்துவந்த கேப்டன் ரியான் பராக்கும் அவுட்டாகி வெளியேற 7 ஓவரில் 60 ரன்களுடன் விளையாடிவருகிறது ராஜஸ்தான் அணி.