சவுரவ் கங்குலி - ரோகித் சர்மா web
கிரிக்கெட்

11249* ரன்கள் | ODI கிரிக்கெட்டில் அதிக ரன்கள்.. கங்குலியை பின்னுக்குதள்ளிய ஹிட்மேன்!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், கோலியை தொடர்ந்து 3வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா..

Rishan Vengai

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், கோலியை தொடர்ந்து 3வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா..

2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமயிலான இந்திய அணி வென்றது. இந்தசூழலில் 2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவிடமிருந்த ஒருநாள் கேப்டன்சி பொறுப்பை கைப்பற்றி சுப்மன் கில்லிடம் ஒப்படைத்துள்ளது இந்திய தேர்வுக்குழு.

ஜெய் ஷா, ரோகித் சர்மா

இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

கங்குலியை பின்னுக்கு தள்ளிய ஹிட்மேன்..

அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி 72 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளினார்..

முதலிடத்தில் 18426 ரன்களுடன் சச்சினும், 2வது இடத்தில் 14181* ரன்களுடன் விராட் கோலியும் நீடிக்கும் நிலையில், 11249* ரன்களுடன் ரோகித் சர்மா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 4வது இடத்தில் சவுரவ் கங்குலி 11221 ரன்களுடன் நீடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த போட்டியில் 2 சிக்சர்களை விளாசிய ஹிட்மேன், செனா நாடுகளில் அதிக சிக்சர்கள் அடித்த ஆசிய வீரராக சாதனை படைத்தார்.