17 வருட வரலாற்றில் முதல்முறை.. மீண்டும் 0 ரன்னுக்கு கோலி OUT.. இந்தியா தடுமாற்றம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்து. கேப்டனாக கில் தன்னுடைய முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் தோல்வியை பதிவுசெய்தார்.
இந்நிலையில் அடிலெய்டில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன..
மீண்டும் விராட் கோலி டக்அவுட்..
அடிலெய்டு மைதானத்தில் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி தோல்வியே கண்டதில்லை.. கடைசியாக 2008-ல் தோற்றிருந்த நிலையில், இந்தியா வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதேபோல விராட் கோலி அடிலெய்டு மைதானத்தில் 5 சதங்களுடன் 975 ரன்கள் குவித்திருப்பதால், அவரிடமிருந்து பெரிய ஸ்கோர் வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்தது.
இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் தொடக்கவீரராக களமிறங்கிய கேப்டன் கில் 9 ரன்னில் வெளியேற, அடுத்து களமிறங்கிய விராட் கோலி 4 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார். முதல் போட்டியில் டக் அவுட்டான நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக் அவுட்டாகி இருப்பது கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.. அதுமட்டுமில்லாமல் கோலியின் கிரிக்கெட் கரியரில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை..
10 ஓவர்கள் முடிவில் 29/2 என இந்தியா விளையாடி வருகிறது.