Rohit Sharma enjoying MS Dhoni mimicry web
கிரிக்கெட்

எம்.எஸ்.தோனி குரலில் மிமிக்ரி.. விழுந்து விழுந்து சிரித்த ரோகித்-ரித்திகா!

CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி குரலில் மிமிக்ரி செய்யப்பட்டதற்கு ரோகித் சர்மா வெடித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rishan Vengai

CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் தோனி குரலில் மிமிக்ரி செய்யப்பட்டதற்கு ரோகித் சர்மா வெடித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மாவிற்கு வழங்கினார்.

இதில் கவனிக்கும்படியாக சஞ்சு சாம்சன், வருண் சக்கரவர்த்தி, ரகுவன்ஷி, ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா போன்ற இந்திய வீரர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழுந்து விழுந்து சிரித்த ரோகித் சர்மா..

2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் குரலில் மிமிக்ரி செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் எம் எஸ் தோனியின் குரலில் மிமிக்ரி செய்யப்பட்டபோது, அதை ரோகித் சர்மா மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். போகப்போக சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்து சிரித்த ரோகித் சர்மா, பின்னால் திரும்பி மனைவி ரித்திகாவை பார்த்தார். அவரும் சேர்ந்து சிரிக்க தம்பதியர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்பு விருது வென்ற பிறகு பேசிய ரோகித் சர்மா, உலகக்கோப்பையை வெல்வதற்கான போராட்டத்தில் பலமுறை அருகில் சென்றுள்ளோம், ஆனால் எங்களால் அந்த லைனை கடக்கமுடியவில்லை. என்ன மிஸ் ஆகிறது என்பதை யோசித்து அதற்கான பிளானை செயல்படுத்தினோம், ஆனால் இதுஒரு குழு வெற்றியாக இருந்தது. ஏனென்றால் ஒன்று இரண்டு வீரர்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது, இதில் அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பும் இருந்தது என்று அணிவீரர்களை பாராட்டி பேசினார்.