sachin - kohli - lara web
கிரிக்கெட்

உலகின் சிறந்த NO.4 டெஸ்ட் வீரர்..? சச்சின், லாரா, கோலியை புறக்கணித்த ரிக்கி பாண்டிங்!

2025 ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் உலகின் சிறந்த நம்பர் 4 பேட்ஸ்மேனை தேர்வுசெய்துள்ளார் ரிக்கி பாண்டிங்..

Rishan Vengai

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், உலகின் சிறந்த நம்பர் 4 டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு ஒரு வீரரை தேர்வு செய்துள்ளார். சச்சின், லாரா, கோலி போன்ற வீரர்களை புறக்கணித்த அவர், ஆஷஸ் தொடருக்கு முன்னதாக இந்த கருத்தை வெளியிட்டார்.

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா மண்ணில் நடக்கவிருக்கிறது..

ஆஸ்திரேலியா சென்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, நவம்பர் 21 முதல் ஜனவரி 08-ம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பெர்த் மைதானத்தில் நாளை தொடங்கும் முதல் போட்டியில் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியாவை வழிநடத்தவிருக்கிறார்..

2025 ashes series / 2025 ஆஷஸ் தொடர்

ஆஷஸ் ஃபீவர் கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உலகின் தலைசிறந்த நம்பர் 4 டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு ஆச்சரியமான பதிலை அளித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்..

சச்சின், லாரா, கோலியை புறக்கணித்த பாண்டிங்..

ஆஷஸ்க்கு முன்னதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடன் பேசிய ரிக்கி பாண்டிங் இடம், உலகின் தலைசிறந்த நம்பர் 4 டெஸ்ட் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி வைக்கப்பட்டது..

முதலில் அவர் ஜெயவர்த்தனே, மார்க் வா போன்ற வீரர்களை புறக்கணித்து கெவின் பீட்டர்சனை தேர்ந்தெடுத்தார்.. பின்னர் கெவினுக்கு பதிலாக ஜேவத் மியான்தத்தை தேர்ந்தெடுத்த அவர், ஸ்டீவ் ஸ்மித்திற்காக மியான்தத்தை புறக்கணித்தார்..

இந்த சூழலில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு போட்டியாக லாராவின் பெயர் காட்டப்பட்டது.. அப்போதும் ஸ்மித்தையே சிறந்த நம்பர் 4 பேட்டராக பாண்டிங் தேர்வுசெய்தார்..

தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தின் எதிர்ப்பக்கத்தில் ஜாக் காலிஸ், விராட் கோலி மற்றும் ஜோ ரூட் போன்ற பெயர்கள் டஃப் கொடுத்தாலும், ஸ்டீவ் ஸ்மித்தையே தேர்வுசெய்தார்..

கடைசியாக இன்னும் கடினமாக சச்சினா? ஸ்டீவ் ஸ்மித்தா? என்ற கேள்வி வைக்கப்பட்டது.. நீண்டநேரம் யோசித்த ரிக்கி பாண்டிங் இறுதியிலும் ஸ்டீவ் ஸ்மித்தையே உலகின் சிறந்த நம்பர் 4 டெஸ்ட் வீரராக தேர்வுசெய்தார்..