டிராவிட் - வாஷிங்டன் - தினேஷ் கார்த்திக்
டிராவிட் - வாஷிங்டன் - தினேஷ் கார்த்திக்pt

’ஜாம்பவான் டிராவிட் ஆடிய NO.3 இடம்..’ வாஷிங்டன் சரியான தேர்வு இல்லை? - DK சொன்னது என்ன?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை மதிப்புமிக்க நம்பர் 3 இடத்தில் விளையாட வைத்ததை தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்..
Published on
Summary

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 3 இடம் சவாலானது. பியூர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே அந்த இடத்தில் விளையாட முடியும் என்பதால், வாஷிங்டனின் பவுலிங் திறமை வீணாகும் என தினேஷ் கார்த்திக் எச்சரித்தார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 3 இடமானது சாம்பியன் வீரர்களால் விளையாடப்பட்டது.. இதுவரை ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்சுமன், சட்டீஸ்வர் புஜாரா, மொஹிந்தர் அமர்னாத், வினோத் காம்ப்ளி போன்ற சாம்பியன் வீரர்களால் விளையாடப்பட்ட நம்பர் 3 டெஸ்ட் இடமானது, தற்போது கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சனை கடந்து பவுலிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரிடம் சென்றுள்ளது..

டாப் ஆர்டர் வீரர்களுக்கும் மிடில் ஆர்டர் வீரர்களுக்கும் இடையில் நின்று அணியை மீட்டு எடுத்துவரவேண்டிய நம்பர் 3 இடமானது பொதுவாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களால் விளையாடப்படுகிறது..

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

அந்தவகையில் வாஷிங்டன் சுந்தரை நம்பர் 3 இடத்தில் விளையாட வைத்த கவுதம் கம்பீரின் முடிவை முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்..

டிராவிட் - வாஷிங்டன் - தினேஷ் கார்த்திக்
IND vs SA | இந்தியாவிற்கு மேலும் பின்னடைவு.. ODI தொடரை தவறவிடும் 2 முக்கிய வீரர்கள்!

நம்பர் 3 இடம் சவாலானது..

வாஷிங்டனை நம்பர் 3 இடத்தில் விளையாட வைப்பது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் தினேஷ் கார்த்திக், “டெஸ்ட் வீரராக வாஷிங்டன் சுந்தர் எப்படி பார்க்கப்படுகிறார், அவர் பவுலிங் ஆல்ரவுண்டரா? தற்போது நீங்கள் நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்புகிறீர்கள்.. அதன்மூலம் பேட்டிங்கில் நிறைய ரன்கள் அடிக்கவேண்டும் என்ற செய்தியை வீரருக்கு அனுப்புகிறீர்கள்.. இது வாஷிங்டனின் ஆல்ரவுண்டர் திறமையை முற்றிலுமாக பாதிக்கும்.. நீங்கள் அவரை பேட்டிங்கில் கவனம் செலுத்த சொன்னால், அது மிகவும் சவாலானதாக இருக்கும்.. ஏனென்றால் நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்வது பியூர் பேட்ஸ்மேனால் மட்டுமே முடியும்.. ஒருவேளை அவர் நீண்டநேரம் பேட்டிங் செய்யவேண்டும் என நினைத்தால், பவுலிங்கில் அவருடைய திறமை வீணடிக்கப்படும்” என கிறிக்பஸ்ஸில் கேள்வி எழுப்பினார்..

டிராவிட் - வாஷிங்டன் - தினேஷ் கார்த்திக்
LOYALTY-க்கு வேலை இல்ல | CSK to SRH.. தூணாக நின்ற வீரர்களையே தூக்கியெறிந்த 5 அணிகள்!
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

இந்தசூழலில் இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தினேஷ் கார்த்திக்கிடம் மீண்டும் வாஷிங்டன் சுந்தர் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.. அப்போது பதிலளித்த அவர், “நம்பர் 3 இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலானது.. அந்த இடத்தில் பியூர் பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவார்கள்.. வாஷிங்டன் சுந்தர் ஒரு ஆல்ரவுண்டர், அவரிடம் பேட்டிங் டெக்னிக் இருந்தாலும், நம்பர் 3 இடத்தில் விளையாடுவது சவாலானாதாக இருக்கும்.. ஒரு பேட்ஸ்மேன் இடத்தில் விளையாடவேண்டும் என்றால் அதற்கு அதிகமாக தயாராகவேண்டும், பவுலிங், பேட்டிங் இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாது.. அவருடைய பந்துவீச்சு பாதிக்கப்படும்” என்று பேசினார்..

நம்பர் 3 இடத்திற்கே பிரத்யேகமாக தயாராகி விளையாடிவரும் நிறைய திறமையான வீரர்கள் இருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், எதிர்காலத்திற்கு தேவையான வீரரை தேர்வுசெய்யாமல், ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை விளையாட வைத்ததை ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..

டிராவிட் - வாஷிங்டன் - தினேஷ் கார்த்திக்
’இனி வாய்ப்பே இல்லை..’ CSK செய்த மிகப்பெரிய தவறு.. பதிரானா-க்கு போட்டிப்போடும் 5 அணிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com