இரண்டு மாதங்களாக நீண்ட ஐபிஎல் தொடரின் இறுதியில், நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்துள்ளது. புவனேஷ்வர், ஹசல்வுட், க்ருணால், ரொமாரியோ, கோலி, படிக்கல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருடன் வலுவான அணியாக ஆர்சிபி களமிறங்குகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஐபிஎஸ் தொடர் கடைசி நாளை எட்டியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆர்சிபியும், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் சூழலில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் தங்களுடைய பந்துவீச்சை பலப்படுத்தி களமிறங்குகின்றன. இன்ஃபார்மில் இருந்துவரும் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹசல்வுட், ரசிக்தர் சலாம், ஜாக்கப் டஃப்பி முதலிய 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஸ்பின்னர் க்ருணால் பாண்டியாவும், ஆல்ரவுண்டரான ரொமாரியோ ஷப்பர்ட்டும் ஆதரவாக இருக்கின்றனர். பேட்டிங்கில் விராட் கோலி, படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் மற்றும் ஜிதேஷ் சர்மா இருக்கின்றனர், இம்பேக்ட் வீரராக வெங்கடேஷ் ஐயர் பலம் சேர்க்கவிருக்கிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில், ஒரு மாற்றமாக ஸ்பின்னர் சாய் கிஷோருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் கான் இடம்பெறுகிறார். மற்றபடி பந்துவீச்சை ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜேசன் ஹோல்டர் வலுப்படுத்துகின்றனர். மேலும் ரசீத் கான் ஸ்பின்னராக பக்கபலம் சேர்க்கிறார். பேட்டிங்கின் தூண்களாக டாப் 3 வீரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் நீடிக்கின்றனர். இம்பேக்ட் வீரராக க்ளென்பிலிப்ஸ் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.