\
sooryavanshi crying after her defeat in qualifier 2
sooryavanshi crying after her defeat in qualifier 2web

RR அணி தோல்விக்கு காரணம் என்ன? கண்ணீர் விட்டு அழுத சூர்யவன்ஷி.. வைரலாகும் காட்சி.!

குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் தோற்றபிறகு 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர்விட்டது ரசிகர்கள் எல்லோரையும் கலக்கமடையச்செய்துள்ளது.
Published on

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசஸ் அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி தகுதிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணிக்கு எதிராக குவாலிஃபையர் 2 போட்டியை எதிர்கொண்டது.

அந்த போட்டியில் வைபவ் 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினார். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ராஜஸ்தானை வீழ்த்தியது.

Sooryavanshi sets 4 big records against GT
சூர்யவன்ஷிcricinfo

இதன்காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த ஏமாற்றத்தை இளம் வீரரான சூர்யவன்ஷியால் தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் கண்ணீர் விட்டு அழுத காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி பேசும்பொருளாகி வருகிறது.

ஆட்டம் முடிந்த பிறகு டக் அவுட்டில் (Dugout) தனது ஆரஞ்சு நிற தொப்பியால் முகத்தை மூடிக்கொண்டு அவர் அழுதுகொண்டிருந்த காட்சி தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனி ஒரு ஆளாக ராஜஸ்தான் அணியை Playoffs வரை கொண்டு வந்த வைபவ் சூர்யவன்ஷி நேற்று நடந்த போட்டியிலும் 96 ரன்கள் குவித்தார். இருப்பினும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி குவித்தது. 240லிருந்து 250 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தால் ராஜஸ்தான் அணி பக்கம் போட்டி திருப்பியிருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றார். அதேபோல் அணியின் மற்றவீரர்களும் ரன்கள் குவித்திருந்தால் அணிக்கு மேலும் ரன்கள் குவிந்திருக்கும் என்றும் கூறினார்.

ஆனால் ஜடேஜா மற்றும் Donovan Ferreira தவிர மற்ற வீரர்களின் பங்களிப்பு குறைவாக இருந்ததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சூர்யவன்ஷி - ஜடேஜா
சூர்யவன்ஷி - ஜடேஜாcricinfo

நவம்பர் 2024 ஐபிஎல் ஏலத்தில் ₹1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட போது, ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சூர்யவன்ஷி.

ஏப்ரல் 19, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி, ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் அதாவது 14 வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட பிறகு பிறந்த முதல் ஐபிஎல் வீரரான இவர் ஒரு சீசனில் 700 ரன்களைக் கடந்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 600 ரன்களை எட்டிய மிக இளம் வயது வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் சாதனை முறியடித்தார்.

அதுமட்டுமில்லாமல், சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு அன்-கேப்ட் வீரர், ஒரே ஐபிஎல் சீசனில் 700 ரன்களுக்கு மேல் குவிப்பது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

2012 ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில் அடித்த 59 சிக்ஸர்கள் என்ற 14 ஆண்டுகால சாதனையை முறியடித்து, ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்த பெருமையும் இளம் வீரர் சூர்யவன்ஷியையே சாரும்.

இத்தனை சாதனைகள் படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்ததாலும் கோப்பை கனவு தகர்ந்த காரணத்தாலும் கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com