2025 ஆர்சிபி அணி web
கிரிக்கெட்

’அடுத்த ஐபிஎல் கோப்பையும் RCB-க்கு தான்..’ 45 பந்தில் சதம் விளாசிய ஆர்சிபி வீரர்!

2025 ஐபிஎல் தொடரில் ஒரு குழுவாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைத்த ஆர்சிபி, அடுத்த கோப்பையும் வெல்லும் நோக்கில் பயணப்பட்டு வருகிறது..

Rishan Vengai

கோப்பையே வென்றதில்லை, சோக்கர்ஸ் அணி என்ற டேக்லைன் ட்ரோல்களுக்கு எல்லாம் 2025 ஐபிஎல் கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைத்தது ஆர்சிபி அணி.. ரஜத் பட்டிதார் தலைமையில் ஒரு அற்புதமான ஐபிஎல் தொடரை கொண்டிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ஆண்டுகால கோப்பை கனவை நிறைவேற்றிக்கொண்டது..

RCB IPL Champion

இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், ஆர்சிபி அணியின் வீரர்கள் தொடர்ந்து தங்களுடைய அதிரடியான ஃபார்மை வெளிப்படுத்தி வருகின்றனர்..

டிம் டேவிட்

ஒருபக்கம் டிம் டேவிட் ஆஸ்திரேலியா அணிக்காக மிரட்டலான ஆட்டத்தை ஆடிவரும் நிலையில், மற்றொரு பக்கம் ரொமாரியோ ஷெஃபர்டு காட்டடியை வெளிப்படுத்திவருகிறார். இந்தசூழலில் விராட் கோலியும் தென்னாப்பிரிக்கா அணிக்காக அபாரமான சதத்தை விளாசிய நிலையில், சையத் முஷ்டாக் அலி தொடரில் மற்றொரு ஆர்சிபி வீரரான தேவ்தத் படிக்கல் 45 பந்தில் சதமடித்து மிரட்டியுள்ளார்..

46 பந்தில் 102 ரன்கள் குவிப்பு..

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான சையத் முஷ்டாக் அலி டிராபி போட்டி இன்று நடைபெற்றது.. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல், 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு 45 பந்தில் சதமடித்து அசத்தினார்.. 102 ரன்கள் அடித்த படிக்கல்லின் ஆட்டத்தால் 20 ஓவரில் 245 ரன்களை குவித்தது கர்நாடகா..

4 ஓவரில் 47 ரன்களை விட்டுக்கொடுத்த தமிழ்நாடு கேப்டன் வருண் சக்கரவர்த்தி விக்கெட்டையும் வீழ்த்தாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது..

246 ரன்கள் இலக்கு என்ற மிகப்பெரிய டோட்டலை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணி 100 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.. 145 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது கர்நாடகா..

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக விராட் கோலி, டிம் டேவிட், படிக்கல், ரொமாரியோ, ஃபிலிப் சால்ட், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்கள் பிரைம் ஃபார்மில் அவர்களுக்கு அடுத்த கோப்பையையும் வெல்லும் வாய்ப்பை உருவாக்கிவருகிறது.. சமீபத்தில் அடுத்த கோப்பையை வெல்வோம் என ஜிதேஷ் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..