virat kohli, ravi shastri x page
கிரிக்கெட்

”அடங்காதவர்; திமிர்பிடித்தவர்..” - விராட் கோலியின் நடத்தை குறித்து விமர்சித்த ரவி சாஸ்திரி!

விராட் கோலியின் நடத்தை குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தவறான விமர்சனத்தை வைத்திருப்பது ரசிர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

’இந்தியாவின் ரன் மெஷின்’ என அழைக்கப்படும் விராட் கோலி, ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். 50 ஓவர் உலகக் கோப்பையைக் கருத்தில்கொண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். எனினும், தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. இந்த நிலையில், விராட் கோலியின் நடத்தை குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தவறான விமர்சனத்தை வைத்திருப்பது ரசிர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கும் ரவிசாஸ்திரி, “திமிர்பிடித்தவர், அடங்காதவர், எல்லாவற்றையும் எல்லை வரை கொண்டு செல்பவர் என்று மைதானத்தில் கோலியைப் பற்றிச் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் இதற்கு முற்றிலும் நேர் எதிரானவர். ஆட்டத்திற்குள் நுழையும்போது ஒரு விதமாகவும், வெளியே வரும்போது மற்றொரு விதமாகவும் மாறும் குணம் கொண்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், கடந்த சில ஆண்டுகளில் சிவப்புப் பந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூதர்களில் ஒருவராக அவர் திகழ்ந்துள்ளார். இந்த வகை கிரிக்கெட் மேம்படுத்துவதில் அவரது தாக்கம் அளப்பரியது” எனத் தெரிவித்துள்ளார்.