2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்து அசத்தினார்..
ரஞ்சிக்கோப்பை தொடரின் 91வது பதிப்பு அக்டோபர் 15-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 28 வரை நடக்கிறது. 90 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே கோப்பை வென்றுள்ள தமிழ்நாடு அணி இம்முறை கோப்பை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் முதல்சுற்று போட்டிகள் தொடர்ந்துள்ள நிலையில், 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார் மத்தியபிரதேஷ் அணி கேப்டன் ரஜத் பட்டிதார்.
கடந்த ரஞ்சிக்கோப்பை தொடரில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார், 48.09 சராசரியுடன் 529 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக கோப்பையை வென்று வரலாறு படைத்த ரஜத், தன்னுடைய பேட்டிங் ஃபார்மை தொடர்ந்து வருகிறார்.
அந்தவகையில் 2025-26 ரஞ்சிக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பஞ்சாப் அணிக்கு எதிராக 26 பவுண்டரிகளுடன் இரட்டை சதமடித்து அசத்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய முதல் இரட்டைசதம் இதுவாகும்.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 232 ரன்களுக்கு சுருண்ட நிலையில், மத்திய பிரதேச அணி 3-ம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் 519/8 என்ற வலுவான நிலையில் உள்ளது. ரஜத் பட்டிதார் 205 ரன்களுடன் நாட் அவுட்டில் நீடிக்கிறார்.