ind vs aus web
கிரிக்கெட்

Ind vs Aus: 5வது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா? மெல்போர்ன் வானிலை எப்படி இருக்கும்? விவரம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியானது கடைசிநாள் ஆட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கு இரண்டு அணிகளும் தொடரில் 2-1 என முன்னிலை பெறமுடியுமா என்ற முனைப்புடன் இருக்கின்றன.

Rishan Vengai

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதிபெற்ற நிலையில், இரண்டாவது அணியாக இந்தியாவா? அல்லது ஆஸ்திரேலியாவா? இரண்டில் எந்த அணி செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமானது நாளை நடைபெறவிருக்கிறது. ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இறுதிநாளில் வெற்றியை தக்கவைக்க இந்திய அணி 300 ரன்னுக்கும் மேற்பட்ட இலக்கை துரத்த வேண்டியிருக்கும்.

ind vs aus

பரபரப்பான சூழ்நிலையில் கடைசி நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிடுமா?, மழை குறுக்கிட்டால் ஆட்டத்தின் போக்கு என்னவாகும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

வானிலை எப்படி இருக்கும்? போட்டி தடைபடுமா?

2024 பார்டர் கவாஸ்கர் தொடரை பொறுத்தவரையில் இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகள் ஏற்ற இறக்கத்தை கண்டுள்ளன. முதல் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா கம்பேக் கொடுத்து வெற்றியை தக்கவைத்தது.

india

ஆனால், அதற்குபிறகான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமே ஏற்ற இறக்கத்தை கண்டன. முக்கியமாக 3வது டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களை தவறவிட்ட ஆஸ்திரேலியா அணி, வெற்றியை இந்தியாவிற்கு சாதகமாக தவறவிட்டது. அதேபோல 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சில கேட்ச்களை தவறவிட்ட இந்திய அணி, போட்டியை இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்ற நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

இதற்கிடையில் 3வது டெஸ்ட் போட்டியில் மழையும் பெரிய ரோலை செய்தது. அங்கே முழுநாள் ஆட்டமும் மழையால் தள்ளிவைக்கப்பட்டது. 4வது டெஸ்ட் போட்டியிலும் 3வது நாள் ஆட்டத்தின் முதல் செஸ்ஸனை மழை பாதிக்கச்செய்தது.

australia

இந்நிலையில் 5வது போட்டியிலும் மழை குறுக்கிட்டால் போட்டி மீண்டும் டிராவை நோக்கி செல்லும், பின்னர் சிட்னியில் நடைபெறவிருக்கும் 5வது டெஸ்ட் போட்டியானது வாழ்வா சாவா போட்டியாக மாறும். weather.com வெளியிட்டிருக்கும் தகவலின் படி, மெல்போர்னில் மழை பெய்ய 3% சதவீதமாக மிகவும் குறைவான வாய்ப்பாகவே உள்ளது. மேலும் வெப்பநிலையானது அதிகபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை போட்டியானது மழையால் பாதிக்கப்பட பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை, முடிந்தளவு அனல் பறக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.