துருவ் ஜூரல் bcci
கிரிக்கெட்

NZ vs IND டெஸ்ட் | தனியாளாக போராடிய துருவ் ஜூரல்.. 246 ரன்களுக்கு சுருண்ட இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே அடித்தது இந்தியா.

Rishan Vengai

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வியடைந்த நிலையில், துருவ் ஜூரல் தனியாளாக போராடி 88 ரன்கள் அடித்தார். 246 ரன்களுக்கு சுருண்ட இந்தியா, நியூசிலாந்துக்கு 110 ரன்கள் முன்னிலை கொடுத்தது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நடந்து முடிந்து ஒருநாள் தொடர், டி20 தொடர் இரண்டையும் இந்தியா வென்றிருக்கும் நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால் ஆட்டம் சமன்செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 356 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி 246 ரன்கள் மட்டுமே அடித்தது. டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் 30 ரன்கள் கூட அடிக்காத நிலையில், கடைசிவரை தனியாளாக போராடிய துருவ் ஜூரல் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

110 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.