\
ind a vs sl a
ind a vs sl ax / acc

ஏமாற்றிய இந்திய அணி.. Poor Bowling.. இலங்கையுடனான அரையிறுதியில் படுதோல்வி!

2026 வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இலங்கையிடம் தோற்று வெளியேறியது திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி.
Published on: 
Summary

2026 ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இலங்கையிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய பவுலர்களை சோபிக்க முடியாமல் செய்த இலங்கை தொடக்க வீரர்கள் சதமடித்து மிரட்டினர். இந்தியாவின் 317 ரன்கள் இலக்கை இலங்கை எளிதில் கடந்தது. இதனால் இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2026 வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவருகிறது. இதில் ஆசியாவை சேர்ந்த 8 அணிகள் விளையாடிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் முதலிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றன.

குரூப் ஸ்டேஜில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வலுவாக அணியாக இருக்கின்றன. இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றிருந்தாலும் யுஏஇ-க்கு எதிரான வெற்றிக்கு பிறகு பலமாக திரும்பியது. அதிலும் யுஏஇ-க்கு எதிராக சூர்யவன்ஷி 52 பந்தில் இரட்டை சதமடித்து உலகசாதனை படைத்தது கிரிக்கெட் உலகையே மிரளவைத்துள்ளது.

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது இந்தியா. எப்படியும் இந்தப்போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டியின் நிலைமையை இலங்கை பேட்ஸ்மேன்கள் அப்படியே தலைகீழாக மாற்றினர்.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 317 ரன்கள் சேர்த்தது. அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யவன்ஷி 27 பந்தில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 78 ரன்கள் சேர்த்தார்.

318 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கியது. இலங்கையின் தொடக்க வீரர்களுக்கு எதிராக இந்திய பவுலர்களால் சோபிக்க முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கே இலங்கை 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட நிலையில், இரண்டு ஓபனர்களுமே அடுத்தடுத்து சதமடித்து மிரட்டினர். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அரையிறுதியில் வென்ற இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ind a vs sl a
மீண்டும் அணியிலிருந்து நீக்கம்.. மைதானத்திலேயே கண்ணீர் விட்ட சிராஜ்! முன்னாள் வீரர்கள் கண்டனம்!