ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரை வைத்திருக்க கீரன் பொல்லார்ட்டின் முயற்சிகள் தொடர்கின்றன. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், மும்பை இன்னும் முடிவெடுக்கவில்லை.
2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா டிரேட் விவகாரம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒருபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் 33 நம்பர் உடன் போட்ட டிரேட் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், ஹர்திக் பாண்டியா சென்னை வரப்போகிறார் என்ற செய்தி பேசுபொருளாக இருந்துவருகிறது. ஆனால் மறுபக்கம் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், மும்பையின் புதிய தலைமை பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு ஹர்திக் பாண்டியாவை சமாதானம் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே அவரை வைத்திருக்க முயற்சிசெய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் தான் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமில்லாமல், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் போட்டியிட்டுவருவதாக சொல்லப்படுகிறது. ஹர்திக் பாண்டியவிற்கு மாற்றாக அர்ச்தீப் மற்றும் விஷ்ணு வினோத்தை கொடுக்க பஞ்சாப் அணியும், ஜெய்ஸ்வால் மற்றும் பிஸ்னோயை கொடுக்க ராஜஸ்தானும் முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் எந்தமுடிவையும் எடுக்கவில்லை தெரிகிறது.
இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வானிலை அறிக்கை என்ற வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அரபிக்கடல் என்று கூறி பின்பு அதை மாற்றி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை எனவும், பக்கத்து மாநிலத்திற்கு சென்றுவிட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்தே சிஎஸ்கே டிரேட் பேசியிருப்பதாகவும், லியாம் லிவிங்ஸ்டன் சென்னைக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியா சென்னைக்கு வர வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக சிஎஸ்கே வெளிப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.