glenn philips x
கிரிக்கெட்

முதல் டி20| அதிரடி காட்டிய கிளென் பிலிப்ஸ்.. இந்தியாவுக்கு 226 ரன்கள் இலக்கு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 225 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி.

Rishan Vengai

நியூசிலாந்து முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. கிளென் பிலிப்ஸ் 40 பந்தில் 82 ரன்கள் அடித்து மைதானத்தில் அதிரடி காட்டினார். இந்திய அணியின் பதிலடி எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் 2024ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என சொந்தமண்ணில் இழந்த இந்தியா, வரலாற்று தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மைதானத்தில் இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 225 ரன்கள் அடித்துள்ளது. அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸ் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 40 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.