இலங்கை
இலங்கை pt web
கிரிக்கெட்

பிரகாசமான அரையிறுதி வாய்ப்பை பெற்ற நியூஸிலாந்து அணி!

PT WEB

நேற்று நடந்த உலகக்கோப்பை தொடரில், முதலாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 47வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகளவாக குசால் பெரேரா 51 ரன்களும் தீக்ஷனா 38 ரன்களும் சேர்த்தனர்.

இலங்கை அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியின் தொடக்க விரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கான்வே 45 ரன்களும், ரச்சின் 42 ரன்களிலும் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த வில்லியம்சன், சாப்மென் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இருப்பினும் டாரில் மிட்சல் அதிரடியாக 43 ரன்கள் எடுத்தார். இதனால் நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து தரப்பில் 3 விக்கெட்களை வீழ்த்திய போல்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இருந்தபோதும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்குமே அரையிறுதி வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது என்பதால், அடுத்தடுத்த போட்டிகளே முடிவை நிர்ணயிக்கும். ஒருவேளை நியூஸிலாந்து அரையிறுதிக்கு முன்னேறினால் அந்த அணி, இந்தியாவை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது!