virat kohli - rohit sharma - gambhir - agarkar web
கிரிக்கெட்

தோனியை உள்ளூர் கிரிக்கெட்டில் ஆட சொன்னதில்லை.. ரோகித்-கோலியை குழப்பாதீங்க! - முன்னாள் டீம் Selector

தோனியை ஒருபோதும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொன்னதேயில்லை என்றும், ரோகித் மற்றும் கோலியை குழப்பத்தில் தள்ளிவிடாதீர்கள் என முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்..

Rishan Vengai

2027 உலகக்கோப்பையை நோக்கி ரோகித் சர்மா, விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வற்புறுத்தி குழப்ப வேண்டாம் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அறிவுறுத்தியுள்ளார். வீரர்களின் ஃபிட்னஸ், ஃபார்ம், தெளிவான தகவல் தொடர்பு முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவதை நோக்கமாக கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடி வருகின்றனர்.. டெஸ்ட் மற்றும் டி20 இரண்டு வடிவத்திலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கும் இந்த ஜோடி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறது..

ரோகித் சர்மா - விராட் கோலி

இந்தசூழலில் 37 மற்றும் 38 வயதிலிருக்கும் கோலி மற்றும் ரோகித் இருவரும் 2027 உலகக்கோப்பையின் போது 39 மற்றும் 40 வயதை எட்டுவார்கள் என்பதால், அவர்களுடைய உடற்தகுதி மற்றும் கிரிக்கெட் ஃபார்ம் போன்ற விசயங்கள் கேள்விக் குறிகளாக உள்ளன..

தற்போது இரண்டுபேரும் ஃபிட்னஸில் சிறப்பாக இருந்தாலும் ஃபார்மை இழக்கக்கூடாது என்பதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன..

விராட் கோலி

இந்தசூழலில் தான் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சிறந்த வீரர்களை குழப்பத்தில் தள்ளிவிடாதீர்கள் என முன்னாள் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்த ரோகித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார், மேலும் அவர் தன்னுடைய உடல் எடையை 10கிலோ வரை குறைத்துள்ளார்.. தற்போது விராட் கோலியும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் 135 ரன்கள் குவித்துள்ளார்.. இரண்டு வீரர்களும் தாங்கள் இன்னும் சோடை போகவில்லை என்பதை தேர்வுக்குழுவிற்கு ச(த்)தமாக எடுத்துரைத்துள்ளனர்..

இந்தசூழலில் அணியில் சிறப்பாக விளையாடிவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இரண்டு பேரையும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொல்லி குழப்பி விடாதீர்கள் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்..

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “உள்ளூர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை விளையாட வைப்பது குறித்து எப்போதும் பேசப்படாமல் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து தோனியுடன் நாங்கள் ஒருபோதும் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. அவசியம் என்று அவர் நினைக்கும் போதெல்லாம் விளையாடினார். முன்கூட்டியே வீரர்களுடன் தெளிவான தகவல் தொடர்பு இருக்க வேண்டும். இல்லையெனில், செயல்திறன் பாலிசியில் உறுதியாக இருக்கவேண்டும்.. தெளிவின்மைக்கு எந்த வாய்ப்பும் இருக்கக்கூடாது” என கூறியுள்ளார்..

அதேநேரம் சர்வதேச போட்டிகள் இல்லாத நேரத்தில் கோலி மற்றும் ரோகித் இருவரும் விருப்பப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் அது இளம்வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்..