england former cricketer robin smith died at 62 age
england former cricketer robin smith died at 62 ageweb

47,737 ரன்கள்.. 101 சதம்.. 255 அரைசதம்! 62 வயதில் முன்னாள் ஜாம்பவான் வீரர் மரணம்!

முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரரான ராபின் ஸ்மித் 62 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது..
Published on
Summary

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ராபின் ஸ்மித், 62 வயதில் மரணமடைந்தார். 1980-2003 காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள், முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் மொத்தம் 47,737 ரன்கள், 101 சதங்கள், 255 அரைசதங்கள் அடித்தார். கட் ஷாட்டின் மாஸ்டர் எனப் புகழ்பெற்ற அவர், பல முக்கிய வெற்றிகளில் பங்கு வகித்தார். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ராபின் ஸ்மித், உடல்நலக்குறைவால் 62 வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது..

இங்கிலாந்து அணிக்காக 1980 முதல் 2003 வரை விளையாடிய ராபின் ஸ்மித், முதல்தர கிரிக்கெட்டில் 61 சதங்கள் மற்றும் 131 சதங்களுடன் 26155 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 27 சதங்கள் மற்றும் 87 அரைசதங்களுடன் 14927 ரன்களும் அடித்துள்ளார்..

ராபின் ஸ்மித்
ராபின் ஸ்மித்

சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரையில் டெஸ்ட்டில் 9 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் 4236 ரன்களும், இதில் 3 சதங்கள் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களும் அடித்துள்ளார்..

england former cricketer robin smith died at 62 age
’சத்தம் தேர்வுக் குழுவுக்கு கேட்கணும்..’ 47 பந்தில் டி20 சதம் விளாசிய சர்பராஸ் கான்!

உலகின் அதிவேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட ராபின் ஸ்மித், அவருடைய சிக்னேச்சர் ஷாட்டான ஃபிரண்ட்-புட் ஸ்கொயர் கட் ஷாட்டிற்கு பெயர்போனவர்.. கட் ஷாட்டின் மாஸ்டர் எனவும் புகழப்படுகிறார்..

1990ஆம் ஆண்டு கரீபியன் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ராபின், ஜமைக்காவில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் 1991 மற்றும் 1995-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஹோம் டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்த இரண்டு தொடரையும் 2-2 என டிரா செய்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

england former cricketer robin smith died at 62 age
18 பந்தில் அரைசதம் அடித்த அபிஷேக்.. ஆனால் ஹர்திக் தான் ஹீரோ! அனல்பறந்த போட்டி!
ராபின் ஸ்மித்
ராபின் ஸ்மித்

குறிப்பாக 1993ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 167 ரன்கள் அடித்த ஸ்மித்தின் இன்னிங்ஸ் சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது.. அது 23 ஆண்டுகளாக இங்கிலாந்து வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதை முறியடித்தார்.

england former cricketer robin smith died at 62 age
’அடுத்த ஐபிஎல் கோப்பையும் RCB-க்கு தான்..’ 45 பந்தில் சதம் விளாசிய ஆர்சிபி வீரர்!
ராபின் ஸ்மித்
ராபின் ஸ்மித்

சமீபத்தில் பெர்த்தில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்ட ராபின் ஸ்மித், அவருடைய வீட்டில் இறந்து கிடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை..

england former cricketer robin smith died at 62 age
’சீக்கிரம் இந்திய அணியில் எடுங்க பா..’ 61 பந்தில் 108* ரன்கள்.. புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com