kohli - rohit - dhoni
kohli - rohit - dhoni web
கிரிக்கெட்

”தோனி, கோலி, ரோகித்’’ - 3 பேரில் சிறந்த கேப்டன் யார்? எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன முகமது ஷமி!

Rishan Vengai

சமகாலத்தில் சிறந்த டெஸ்ட் பவுலர் என்றால் முதலில் வந்துநிற்கும் பெயராக நிச்சயம் முகமது ஷமியின் பெயர் இருக்கும். முகமது ஷமியிடம் இருக்கும் சீம் பொஷிசன் தற்காலத்தில் வேறெந்த வேகப்பந்து வீச்சாளருக்கும் கிடையாது. புதிய பந்தில் லேட் ரிவர்ஸ் ஸ்விங்கை வைத்திருக்கும் முகமது ஷமி, பழைய பந்தில் எந்தவொரு உலகத்தரம் வாய்ந்த பேட்டரையும் வெளியேற்றக்கூடிய டேன்ஜரான பவுலராகவும் பார்க்கப்படுகிறார்.

டெஸ்ட், ஒருநாள், டி20, ஐபிஎல் என அனைத்து போட்டிகளிலும் 575 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முகமது ஷமி, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி, கோலி, ரோகித், ஹர்திக் பாண்டியா முதலிய பலவிதமான கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், நியூஸ்18 உடனான உரையாடலில் பேசியிருக்கும் ஷமி, இதுவரை விளையாடிய கேப்டன்களில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு நேர்மறையாக ஒரு பதிலை கூறினார்.

தோனி? கோலி? ரோகித்? யார் சிறந்த கேப்டன்?

தோனியின் கேப்டன்சியின் கீழ் அறிமுகமான முகமது ஷமி, ஒரு சிறந்த டேலண்ட்டாக கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் குடும்ப பிரச்னை, பிட்னஸ் பிரச்னை போன்ற பெரிய சிக்கல்களில் சிக்கிய அவர் கொஞ்ச நாட்களில் காணாமல் போனார். அப்படி காணாமல் போனவரை மீண்டும் நேரடியாக இந்திய அணிக்குள் எடுத்துவந்த விராட் கோலி, பும்ரா, முகமதுஷமி, சிராஜ், இஷாந்த் ஷர்மா என எப்போதும் இல்லாதவகையில் ஒரு சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கட்டமைத்தார். கோலியின் தலைமையின் கீழ் முகமது ஷமி ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவெடுத்தார்.

Shami

அதனைத்தொடர்ந்து முகமது ஷமியை பாதுகாத்த ரோகித் சர்மா, அவரை சரியான இடத்தில் பயன்படுத்தி முன்னணி பவுலராக எடுத்துவந்தார். பும்ரா காயத்தால் இடம்பெறாத நிலையில், இந்திய அணியின் லீடிங் பவுலராக வழிநடத்தியவர் முகமது ஷமி. ஐபிஎல் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாடிய அவர், 2022ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், 2023ம் ஆண்டு ரன்னராகவும் மாறினார்.

shami

இப்படி பல நிலைமைகளில் பல கேப்டன்சியின் கீழ் விளையாடிய முகமது ஷமியின் வாழ்க்கையில், விராட் கோலி முக்கிய பங்காற்றியுள்ளார். அப்படியிருந்த போதும் ஷமி சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு நேர்மறையாக பதிலளித்துள்ளார்.

kohli - dhoni - rohit

சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் பேசிய ஷமி, “ஒவ்வொருவருக்கும் இதில் வெவ்வேறு கண்ணோட்டம் உள்ளது. நாம் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, யார் ​​​​அதிகமாக சாதித்திருக்கிறாரோ அவருக்கு தான் சாதகமாக செல்லமுடியும். என் பார்வையில், அது எம்எஸ் தோனி தான், ஏனெனில் அவரைப் போல யாரும் வெற்றிபெறவில்லை” என்று கூறியுள்ளார்.

GOAT வீரர் யார்? ரோகித்தா? கோலியா?

Rohit- Kohli

எக்காலத்திற்கும் சிறந்த வீரர் கோலியா?, ரோகித்தா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “விராட் கோலியை பொறுத்தவரையில் அவர் தான் உலகின் தலைசிறந்த பேட்டர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை அவர் முறியடித்துள்ளார். அதனால் விராட் சிறந்தவர் என்று நினைக்கிறேன். ஆனால் மிகவும் ஆபத்தான வீரர் யார் என்று கேட்டால் அது ரோகித் சர்மாவாகத்தான் இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.