shami pt web
கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் ஷமி.. ODI-க்கு திரும்பும் சஞ்சு சாம்சன்!

ஐபிஎல் தொடரில் சிறப்பாக வீசிவரும் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

நீண்டகாலம் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் இருந்துவரும் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் மீண்டும் திரும்புகிறார். அதேபோல சஞ்சு சாம்சனும் ஒருநாள் போட்டிக்கு திரும்புகிறார்.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய முகமது ஷமி, அதற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவே இல்லை. கடைசி சர்வதேச போட்டியை பொறுத்தவரை 2025 சாம்பியன்ஷ் டிராபி இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார்.

shami

இந்தசூழலில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டுவந்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமி விளையாடவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்துவரும் சஞ்சு சாம்சன், டி20 உலகக்கோப்பை, ஐபிஎல் தொடரில் தன்னுடைய சிறந்த ஃபார்மிற்கு பிறகு ODI தொடரில் இடம்பெறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.