2025 champions trophy pt
கிரிக்கெட்

”இந்தியா கோப்பை வெல்லும்..” அதிக ரன்? அதிக விக்.? தொடர் நாயகன்? வீரர்களை கணித்த கிளார்க்!

2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

Rishan Vengai

ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.

ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

முதல் போட்டி கராச்சியில் பிப்ரவரி 19-ம் தேதியன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் எந்த அணி கோப்பை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.

இந்தியா கோப்பை வெல்லும்..

பியாண்ட்23 போட்காஸ்டில் சமீபத்தில் பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியே கோப்பை வெல்லும் என தெரிவித்தார்.

ரோகித் சர்மா

அதிக ரன்கள் - நான் இந்திய அணியுடன் செல்லப்போகிறேன், இந்தியா கோப்பை வெல்லும், அதிக ரன்கள் குவித்த வீரராக ரோகித் சர்மா இருப்பார். அவர் சமீபத்தில் ஃபார்மிற்கு திரும்பி இருப்பதால் நான் ரோகித் சர்மாவிற்கு செல்கிறேன்.

அதிக விக்கெட்டுகள் - இங்கிலாந்து அணி சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலராக ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் என்பதால் நான் அவரை தேர்ந்தெடுக்கிறேன்.

Travis Head

தொடர் நாயகன் - சிறந்த ஃபார்மில் இருக்கும் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகன் விருதை வெல்வார். ஐபிஎல் தொடங்கி, சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்காக சிறந்த ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் வெளிப்படுத்தி வருகிறார் என தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார்.