ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அனைத்துகால சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான க்ளென் மெக்ராத் மற்றும் கில்லஸ்பி இருவரும் பட்டியலிட்டனர்..
இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் பல வேகப்பந்துவீச்சாளர்கள் சைலண்ட் ஹீரோக்களாக இருந்துள்ளனர். சொல்லப்போனால் பல பவுலர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் கூட பொய்யாகாது.
அந்தவகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பவுலிங் தூண்களான விளங்கிய பவுலர்கள் பட்டியலில் சிறந்த 5 பேரை ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் மெக்ராத், கில்லஸ்பி மற்றும் டேமியன் ஃப்ளெமிங் தேர்வுசெய்துள்ளனர்..
யூடியூப் சேனல் உரையாடலில் பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள், இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த ODI வேகப்பந்துவீச்சாளர்களை பட்டியலிட்டனர்.
மெக்ராத் பட்டியலிடும் போது, 5வது பவுலராக ஜவஹல் ஸ்ரீநாத்தையும், 4வது பவுலராக அஜித் அகர்கர், 3வது பவுலராக முகமது ஷமியையும் தேர்வுசெய்தார். 2வது பவுலராக கபில்தேவை தேர்வுசெய்த அவ்ர், முதல் இடத்தில் பும்ராவை தேர்வுசெய்தார்.
கில்லஸ்பி தன்னுடைய விருப்பமாக, முதலிரண்டு இடத்தை தற்போதைய பவுலர்களான பும்ரா மற்றும் ஷமிக்கு ஒதுக்கினார். 3வது பவுலராக கபில் தேவ், 4வது மற்றும் 5வது பவுலராக அகர்கர், ஜவஹல் ஸ்ரீநாத்தை பட்டியலிட்டார்..
டேமியன் ஃப்ளெமிங் மட்டும் தான் தன்னுடைய ஆல்டைம் பட்டியலில் ஜகீர் கானை பட்டியலிட்டார். அவருடைய தரத்தின் படி, பும்ரா, கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், ஷமி மற்றும் ஜகீர் கான் என பட்டியலிட்டுள்ளார்..