மேக்ஸ்வெல் தேர்வுசெய்த ஆல்டைம் IND+AUS+ENG இணைந்த ODI அணி pt
கிரிக்கெட்

IND+AUS+ENG ஆல்டைம் ODI அணி | இங்கிலாந்து வீரர்களை ஒதுக்கிய மேக்ஸ்வெல்.. 6 IND வீரர்கள் இடம்!

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அடங்கிய கலவையான ஒருநாள் அணியை தேர்வுசெய்தார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்.

Rishan Vengai

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அடங்கிய கலவையான ஒருநாள் அணியை தேர்வுசெய்தார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் க்ளென் மேக்ஸ்வெல்.

ஆஸ்திரேலியா அதிரடி வீரரான க்ளென் மேக்ஸ்வெல் 2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை என 3 உலகக்கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.

2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனியொருஆளாக வெற்றியை தேடிக்கொடுத்த மேக்ஸ்வெல், இரட்டை சதம் விளாசியதுடன் ஆஸ்திரேலியா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அக்டோபர் 14-ம் தேதியான இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் அடங்கிய கலவையான ஒருநாள் அணியை தேர்வுசெய்தார்.

இங்கிலாந்து வீரர்கள் இல்லாத ஒரு அணி..

ஃபாக்ஸ் கிரிக்கெட் யூடியூப் சேனலில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அடங்கிய கலவையான ஒருநாள் அணியை தேர்ந்தெடுக்குமாரு மேக்ஸ்வெல் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

sachin

அப்போது தொடக்க வீரருக்கான ஸ்லாட்டில், ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மார்க் வாக் ஆகியோர் மேக்ஸ்வெல்லுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர் தனது தொடக்க வீரர்களாக இந்திய ஜோடியான ரோகித் சர்மா மற்றும் சச்சின் டெண்டுல்கரை தேர்ந்தெடுத்தார்.

மைக்கேல் பெவன்

மிடில் ஆர்டரில், விராட் கோலி, ஜோ ரூட், ரிக்கி பாண்டிங், இயன் மோர்கன், மைக்கேல் கிளார்க் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோரிலிருந்து தேர்வு செய்யும்படி அவரிடம் கேட்கப்பட்டது. மேக்ஸ்வெல், தன்னுடைய சக ஆர்சிபி வீரரான கோலியை 3வது இடத்தில் தேர்வுசெய்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் 4வது இடத்திலும் மற்றும் மைக்கேல் பெவன் 5வது இடத்திலும் தேர்வுசெய்தார்.

shane watson

ஆல்ரவுண்டர் இடத்திற்கு, யுவராஜ் சிங், கபில் தேவ், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மார்க் வா, ஆண்ட்ரூ பிளின்டாஃப் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை விட ஷேன் வாட்சனை 6வது வீரராக அவர் தேர்ந்தெடுத்தார். இதற்கிடையில், ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை விட தனது விக்கெட் கீப்பராக எம்.எஸ். தோனியை 7வது வீரராக தேர்ந்தெடுத்தார்.

வார்னேவை விட கும்ப்ளேவை தேர்வுசெய்த மேக்ஸ்வெல்..

பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா, க்ளென் மெக்ராத், பிரட் லீ, ஷேன் வார்னே, ஆடம் ஜாம்பா, டேரன் கோஃப் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்களில் இருந்து தேர்வு செய்ய க்ளென் மேக்ஸ்வெல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

அவர் ஷேன் வார்னேவிற்கு பதில் 8வது வீரராக அனில் கும்ப்ளேவையும், 9வது வீரராக ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீயையும், 10வது வீரரக ஜஸ்பிரித் பும்ராவையும், 11வது வீரராக க்ளென் மெக்ராத்தையும் தேர்வுசெய்தார். அவருடைய கலவையான அணியில் ஒரு இங்கிலாந்து வீரர்கள் கூட இடம்பெறவில்லை.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் நெருங்குவதால் மேக்ஸ்வெல் இங்கிலாந்து வீரர்களை தேர்வுசெய்யவில்லை என்றும், ஒரேயொரு இங்கிலாந்து வீரரை தேர்வுசெய்துள்ளார் என விராட் கோலியை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

மேக்ஸ்வெல்லின் IND+AUS+ENG கலவையான ODI அணி:

சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி, ரிக்கி பாண்டிங், மைக்கேல் பெவன், ஷேன் வாட்சன், எம்எஸ் தோனி, பிரட் லீ, அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் க்ளென் மெக்ராத்.