டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், மார்ச் 5ஆம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டிக்காக இன்று, வான்கடே மைதானத்தில் இந்திய அணி மாலை 6 முதல் 9 மணி வரை பயிற்சியில் ஈடுபடும் எனத் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று தொடங்கிய ஆண்டின் முதல் சந்திரகிரணம் 3.20 மணிக்குத் தொடங்கி 6.47 மணி வரை நீடித்த நிலையில், பயிற்சியை 1 மணி நேரம் தாமதமாக அதாவது, மாலை 7 மணிக்கு இந்திய அணி தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள சில ஆன்மிக நடைமுறைகளின் படி, ”சந்திர கிரகண காலத்தில் எந்த நல்ல காரியங்களிலும் ஈடுபடக்கூடாது” என்ற கருத்து நிலவுகிறது. இந்த சூழலில் தான், இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், மதியம் 2 மணியளவில் தனது பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து அணி மாலை 5 மணியளவில் முடித்துக் கொண்டிருக்கிறது.
நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில், தொடர்ச்சியாக கோப்பை தக்கவைக்கும் வாய்ப்பில் நீடிக்கும்.