புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு வேகம் மற்றும் செயல்திறன் குறைந்ததால், ஆர்சிபி அணி அவரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன் வெளியேற்றப்பட்ட வீரர்கள் பட்டியல் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
17 ஆண்டுகளாக கோப்பையே வெல்லாமல் இருந்துவந்த ஆர்சிபி அணி, அடுத்தடுத்த 2 சீசன்களில் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். அதிலும் 2026 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 7.9 எகானமி மற்றும் 17.89 சராசரியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலராக அசத்தினார்.
இந்தசூழலில் இந்திய டி20 அணியின் பந்துவீச்சு மோசமானதாக இருந்துவந்த நிலையில், புவனேஷ்வர் குமாரை இந்திய டி20 அணியில் எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்துவந்தனர். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புவனேஷ்வர் மீண்டும் அணிக்கு வருவதை ஆதரித்தனர்.
இந்நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த புவனேஷ்வர் குமார், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஒரு போட்டிக்கு 50 ரன்கள் வீதம் விட்டுக்கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்து டி20 தொடரில் புவனேஷ்வர் குமாரின் வேகமமும் 130லிருந்து 120ஆக குறைந்தது.
அதுமட்டுமில்லாமல் அவருடைய பந்துவீச்சு நீளமும், பந்துவீசும் விதமும் மொத்தமாக சொதப்பியது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் 50 ரன்களை வரை விட்டுக்கொடுத்து 4 இன்னிங்ஸில் 180 ரன்களை கசியவிட்டார். இது ஒரு இருதரப்பு டி20 தொடரில் ஒரு பவுலர் விட்டுக்கொடுத்த அதிகட்ச ரன்களாகும்.
இந்தசூழலில் புவனேஷ்வர் குமாரின் வேகமும் குறைந்து, செயல்பாடும் மோசமாக இருப்பதால், ஆர்சிபி அணி அவரை வெளியேற்ற திட்டமிட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாக வரும் 15ஆம் தேதியன்று வெளியேற்றப்படும் வீரர்கள் பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், இந்த தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அடுத்தமாதம் 16ஆம் தேதி மினி ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது.