இந்தியாவிற்கு ஒரு தாதா.. தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு டெம்பா! சாபத்தை நீக்கிய தேவதூதன்!
தென்னாப்பிரிக்கா அணியின் நிறவெறி சாபத்தை முடிவுக்குக் கொண்டு வந்த டெம்பா பவுமா, 2025 WTC ஃபைனலில் வெற்றி பெற்று அணியின் வரலாற்றை மாற்றினார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 வெற்றி பெறச்செய்து அணிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார்..
கிரிக்கெட்டில் நிறவெறி பார்த்ததற்காக ஒரு அணி 20 ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட வரலாறு தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமே உண்டு..
பின்னர் கருப்பு, வெள்ளை நிறத்தவர்கள் அனைவரும் விளையாட அனுமதிக்கிறோம், Quota அடிப்படையில் கண்டிப்பாக அணியின் 11 பேரில் கருப்பினர்கள் இடம்பெறுவார்கள் என கொள்கையை மாற்றிய பிறகுதான் தென்னாப்பிரிக்கா மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தது..
நிறவெறியை ஆதரித்ததாலோ என்னவோ மிகப்பெரிய கோப்பையை வெல்லும் வாய்ப்பு எல்லாம், ஒவ்வொரு முறையும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற பரிதாப நிலைதான் இருந்தது. 2015 உலகக்கோப்பை தோல்வியில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் மைதானத்திலேயே அழுததை எல்லாம் மறக்கவே முடியாது.. எத்தனை தோல்விகள், எத்தனை எத்தனை இதயத்தை நொறுக்கும் ஏமாற்றங்கள்..
2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிவரை அவர்களின் கர்மா தொடர்ந்தது.. 30 பந்தில் 30 ரன்கள், களத்தில் 2 ஃபினிஷர்கள் நின்ற போதும் தோற்றுபோனதெல்லாம் சாபத்தின் உச்சம்..
ஆனாலும் தென்னாப்பிரிக்கா மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை.. டெம்பா பவுமா கேப்டனாக பொறுப்பேற்ற போது குள்ளன், கோட்டாவில் உள்ளே வந்தவன் என படுமோசமாக துஷ்பிரயோகம் செய்தனர்.
Ab de villiers போன்ற தலைசிறந்த வீரர்களெல்லாம் பாதியிலேயே கழன்று கொண்ட நிலையில், இனி தென்னாப்பிரிக்கா அணியில் ஒன்றுமே இல்லை என்பதுபோல அணியையே கலைக்கும் அளவிற்கு மேனேஜ்மென்ட் politics அரங்கேறியது.. ஒரு நேரத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட அதே மோசமானநிலை.. அப்போது கங்குலி இந்தியாவை காப்பாற்ற வந்தது போல, தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற டெம்பா பவுமா தலைதூக்கினார்..
கிரிக்கெட்டின் தலைசிறந்த வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த டெஸ்ட் மேஸை 2025 WTC ஃபைனலில் வென்று தென்னாப்பிரிக்காவிற்கு சாப விமோசனம் கொடுத்தார் பவுமா.. அங்கிருந்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றிநடை போட்டு வருகிறது..
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-1 என்ற நிலையிலிருந்து மீட்டு 2-1 என வெற்றிபெற செய்துள்ளார். தொடரில் அதிக விக்கெட்டுகள் ஸ்டார்க், அதிக ரன்கள் ரென்ஷா என இருவருமே ஆஸ்திரேலியர்கள் தான்.. ஆனால் தொடரை வென்றது என்னவோ தென்னாப்பிரிக்கா.. அவர்கள் ஒரு குழுவாக இந்த தொடர் வெற்றியை சொந்தமாக்கிக் கொண்டனர்..
ஒருவர் போனால் ஒருவர் என பல மேட்ச் வின்னர்கள் தலைதூக்கினர், இந்த தொடர் வெற்றிக்கு அச்சாணி இரண்டாவது டெஸ்ட்டில் பவுமா அடித்த அதி அற்புதமான சதம்.. அது இல்லையேல் ஆஸ்திரேலியா 2-1 என தொடரை தட்டிச்சென்றிருக்கும்.. ஏன் 3-0 என்று கூட வென்றிருக்கலாம்..
கடைசி இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஹார்மர் டெம்பா பவுமாவை களத்திலேயே தூக்கிக் கொண்டாடினார்.. அதைப்பார்த்த ஒவ்வொரு தென்னாப்பிரிக்கா ரசிகனுக்கும் அனைவரும் தூக்கி கொண்டாடுங்கள் என தோன்றிருக்கும்..
இந்தியாவிற்கு ஒரு தாதா போல, தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு டெம்பா!
Defenitely we are in Bavuma's ERA!
இது டெம்பா பவுமாவின் காலம்!

