28 சிக்சர்களுடன் 384.9 ஸ்ட்ரைக்ரேட் சாதனையை நிகழ்த்திய சூர்யவன்ஷி, இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியை தந்தார். ஜடேஜாவின் நகைச்சுவை பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நேற்று நடைபெற்ற யுஏஇ-க்கு எதிரான ஆசியக்கோப்பை ஒருநாள் போட்டியில் காலத்திற்கும் அழிக்கவே முடியாத ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. கிரவுண்டின் நாலாபுறமும் 28 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 52 பந்தில் இரட்டை சதமடித்து மாபெரும் உலகசாதனையை நிகழ்த்தினார். அவரின் அதிரடியால் வெறும் 14.2 ஓவரில் 250 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்தது இந்திய அணி.
நேற்றைய ஒரே போட்டியில் மட்டும் 28 பந்தில் அதிவேக லிஸ்ட் ஏ சதம், 40 பந்தில் அதிவேக 150 ரன்கள், 52 பந்தில் அதிவேக இரட்டை சதம், 28 சிக்சர்களுடன் ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் அதிக சிக்சர்கள், 53 பந்துகளை சந்தித்த பிறகு அதிகபட்சமாக 384.9 ஸ்ட்ரைக்ரேட் என 5 உலக சாதனைகளை படைத்துள்ளார் 15 வயதேயான சூர்யவன்ஷி. மேலும் சுரேஷ் ரெய்னாவின் உடைக்கவே முடியாத சாதனையாக இருந்த 25 பந்தில் 87 ரன்கள் சாதனையையும் முறியடித்து 24 பந்தில் 88 ரன்கள் அடித்தார் சூர்யவன்ஷி.
இந்தசூழலில் தான் அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்திருக்கும் சூர்யவன்ஷியின் பிரமிக்கவைக்கும் ஆட்டத்தை பாராட்டும்வகையில், நகைச்சுவையாக கும்பகர்ண வேடமிட்டு எடிட் செய்து பதிவிட்டுள்ளார் ஜடேஜா. நன்றாக விளையாடினீர்கள் என்ற டேக் லைனுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.