ind a vs nep a bcci
கிரிக்கெட்

இந்திய பந்துவீச்சில் 26 ரன்னுக்கு சுருண்ட நேபாள்.. சதம் விளாசி குமார் குஷாக்ரா மிரட்டல்!

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் நேபாள அணியை 26 ரன்னுக்கு சுருட்டியது இந்திய அணி.

Rishan Vengai

ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் இந்தியா பிரமாண்ட வெற்றி பெற்றது. 332 ரன்கள் அடித்த இந்திய அணி, நேபாள அணியை வெறும் 26 ரன்களுக்கே சுருண்டது. குமார் குஷாக்ரா மற்றும் திலக் வர்மா சதமடித்து அசத்தியதுடன், பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார்.

ஆடவர் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் நேபாளை எதிர்கொண்டு விளையாடியது இந்தியா.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் அடித்தது. சிறப்பாக விளையாடிய திலக் வர்மா மற்றும் இளம் விக்கெட் கீப்பர் குமார் குஷாக்ரா இருவரும் சதமடித்து அசத்தினர். திலக்ர் வர்மா 107 ரன்கள் அடித்த நிலையில், 102 பந்தில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என அடித்து 117 ரன்கள் சேர்த்தார் குமார் குஷாக்ரா.

333 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 26 ரன்களுக்கே சுருண்டது. பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளும், ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இந்தியா 306 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.

நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.