கிராந்தி கௌட் cricinfo
கிரிக்கெட்

இங்கிலாந்து மண்ணில் முதல் வீராங்கனையாக வரலாறு.. இந்தியாவின் கிராந்தி கௌட் படைத்த அசாத்திய சாதனை!

புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார் கிராந்தி கௌட்.

Rishan Vengai

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை 2-1 என இழந்த இந்திய மகளிர் அணி, லார்ட்ஸ் டெஸ்டில் அதிரடி மீள்பிரவேசம் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் எடுத்த இந்தியா, கிராந்தி கௌட் 37 ரன்களுக்கு 5 விக்கெட் வீழ்த்திய அபார வேகப்பந்துவீச்சால் இங்கிலாந்தை 170 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸில் டெஸ்டில் 5 விக்கெட் எடுத்த முதல் வீராங்கனையாக அவர் வரலாறு படைத்துள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது.

டி20 தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் அடுத்த 2 போட்டிகளில் கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி 2-1 என தொடரை வென்று அசத்தியது.

ஸ்மிருதி மந்தனா

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் கிராந்தி கௌடின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 170 ரன்களுக்கு சுருண்டு ஆட்டமிழந்தது.

இந்தப்போட்டியில் 37 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிராந்தி கௌட், புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனையாக வரலாறு படைத்தார். இதற்கு முன்னர் 3 முறை லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள் ஒருநாள் போட்டியிலேயே இதை செய்துள்ளதால் டெஸ்ட்டில் இச்சாதனையை நிகழ்த்தும் முதல்வீராங்கனையாக கிராந்தி சாதனை படைத்தார்.

கிராந்தி கௌட்

115 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 154/1 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது. முதல் இன்னிங்ஸில் 83 ரன்கள் அடித்திருந்த ஸ்மிருதி மந்தனா, இரண்டாவது இன்னிங்ஸில் 69 ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.