\
அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து
அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்துweb

FIFA| அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா.. 3-1 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அசத்தல்!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தை 3-1 வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
Published on
Summary

2026 உலகக்கோப்பை காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, திகில் நிறைந்த ஆட்டத்தில் 3-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அலிஸ்டர் ஆரம்ப கோல், பின்னர் சுவிட்சர்லாந்தின் சமநிலை, கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மற்றும் மார்டினஸ் கோல்கள் என திருப்பம்திருப்பமாக நடந்த ஆட்டம், கடைசி நிமிடங்களில் வெற்றி குவிக்கும் அர்ஜெண்டினாவின் தொடர்ச்சியை மீண்டும் நிரூபித்தது.

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான அரையிறுதி சுற்றை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அர்ஜெண்டினா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.

இன்று நடைபெற்ற 4வது காலிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை எதிர்த்து களம்கண்டது சுவிட்சர்லாந்து அணி. போட்டியின் தொடக்கத்திலேயே 10வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் அலிஸ்டர் கோலடிக்க, முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணியால் கோலடிக்க முடியவில்லை. பின்னர் இரண்டாவது பாதியில் கம்பேக் கொடுத்த சுவிட்சர்லாந்து அணி 67 நிமிடத்தில் கோலடித்து 1-1 என சமன்செய்தது. பின்னர் 90 நிமிடங்கள் வரை இரண்டு அணிகளும் கோலடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

112வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு அற்புதமான கோலடித்து 2-1 என கோல் கணக்கை மாற்றினார். அப்போதே அர்ஜெண்டினாவின் பக்கம் ஆட்டம் திரும்பிவிட்ட நிலையில், 120+1வது நிமிடத்தில் மார்டினஸ் 3வது கோலை அடிக்க அர்ஜெண்டினா 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. 3 நாக் அவுட் போட்டிகளிலும் அர்ஜெண்டினா அணி கடைசி 10 நிமிடங்களில் வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com