இந்திய அணியின் ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பல வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் தொடரில் இந்தியா வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்கமுடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.. டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெல்லும் நோக்கில் இரண்டாவது போட்டியில் விளையாடிவருகிறது..
குவஹாத்தியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் சேர்த்துள்ளது.. சிறப்பான பேட்டிங் ஆடிய தமிழக வம்சாவளி வீரரான சேனுரான் முத்துசாமி சதமடித்து அசத்தினார்..
டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியின் பக்கம் இருக்கும் நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளனர்..
அறிவிக்கப்பட்டியிருக்கும் அணியில் ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் மீண்டும் ஒருநாள் வடிவத்திற்கு திரும்பியுள்ளனர்..
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கோலி, திலக் வர்மா, கேஎல் ராகுல் (கேப்டன்), பந்த் (கீப்பர்), வாசிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரல்