india won Blind Women's T20 Cricket World Cup tittle
india won Blind Women's T20 Cricket World Cup tittlecricinfo

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை | உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!

பார்வையற்ற பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி வரலாறு படைத்தது!
Published on
Summary

பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இறுதிப்போட்டியில் நேபாளத்தை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகின் முதல் சாம்பியனாக இந்தியா உருவெடுத்தது. இந்த வெற்றி இந்திய மகளிர் அணியின் திறமையை உலகிற்கு நிரூபித்தது.

விழிச்சவால் உடைய பெண்கள் கலந்துகொள்ளும் முதல் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை டெல்லி மற்றும் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொண்ட இந்த தொடர், கடந்த நவம்பர் 11ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது.

பெங்களூருவில் நடைபெற்ற சில போட்டிகளுக்குப் பிறகு, நாக் அவுட்களுக்கான போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.

இதற்கிடையே லீக் போட்டிகளில், இலங்கை மற்றும் அமெரிக்காவை 10 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 209 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 85 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

india blind womens team
india blind womens team

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் உலகக்கோப்பையிலேயே இறுதிப்போட்டுக்குள் காலடி வைத்து சம்பவம் செய்தது..

முதல் உலக சாம்பியனானது இந்தியா!

விழிச்சவால் உடைய பெண்களுக்கான முதல் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது நேபாள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது..

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் விளையாடிய நேபாள் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் அடித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மகளிர் அணி 12.1 ஓவரிலேயே 47 பந்துகளை வெளியில் வைத்து 115/3 என 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது..

இதன்மூலம் பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று முதல் உலக சாம்பியனாக வரலாறு படைத்தது இந்திய மகளிர் அணி..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com