brook - root - bumrah web
கிரிக்கெட்

ICC சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருது | ஜோ ரூட், ஹாரி ப்ரூக்கை வீழ்த்தி வென்றார் பும்ரா!

2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஜோ ரூட், ஹாரி ப்ரூக் போட்டியில் இருந்தபோதும் வென்றுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

Rishan Vengai

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சுழற்சி அட்டவணை துவங்கிவிட்டது. இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியையும், பெண்களுக்கான சிறந்த ஒருநாள் அணியையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அதனுடன் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டி20, ஒடிஐ மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டர்கள், சிறந்த அம்பயர்கள் முதலிய விருதுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.

பும்ரா

அந்தவகையில் தற்போது 2024-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டருக்கான விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ICC சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் பும்ரா..

2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான போட்டியில் இந்திய ஜஸ்பிரித் பும்ரா, ஜோ ரூட், ஹாரி ப்ரூக் மற்றும் இலங்கையின் இளம் வீரர் கமிந்து மெண்டீஸ் முதலிய வீரர்களுக்கிடையே போட்டி நிலவியது.

ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட இந்த 4 வீரர்களில் கடந்தாண்டு சதங்களாக குவித்துவந்த ஜோ ரூட், ஒரே ஆண்டில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்து, 12,000 டெஸ்ட் ரன்களை கடந்த இளம்வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

root - brook

அதேபோல 2024-ம் ஆண்டில் 1000 டெஸ்ட் ரன்களை கடந்த ஹாரி ப்ரூக், 64 சராசரியுட்ன் 4 டெஸ் சதங்களை குவித்தார். உடன் 2024-ம் ஆண்டு இலங்கை அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக அறியப்பட்ட கமிந்து மெண்டீஸ், 5 சதங்களை குவித்து ஆயிரம் ரன்களையும் கடந்தார்.

kamindu mendis

இந்நிலையில் 3 பேட்ஸ்மேன்களின் அபாரமான திறமைகளுக்கு இடையே இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2024-ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருதை வென்று அசத்தியுள்ளார்.

ஒரு அசாத்தியமான வருடத்தை கொண்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா, 2023-ம் ஆண்டு காயத்திலிருந்து மீண்டுவந்து 2024-ல் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு நம்பமுடியாத டெஸ்ட் கிரிக்கெட்டை கொண்டிருந்தார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் கஸ் அட்கின்ஸன் 52 விக்கெட்டுகளுடன் நீடிக்கிறார். பும்ராவை பல கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு முன்னாள் வீரர்கள் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.