jannik sinner AFP
கிரிக்கெட்

ஏடிபி டென்னிஸ் | சின்னர் மீண்டும் சாம்பியன்.. சவால்விட்ட அல்காரஸ்!

இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், ஏடிபி டென்னிஸ் போட்டியில் இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Prakash J

இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், ஏடிபி டென்னிஸ் போட்டியில் இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இத்தாலிய டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர், ஏடிபி டென்னிஸ் போட்டியில் இரண்டாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று இத்தாலியில் நடந்த இறுதிப்போட்டியில், அவர் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸை 7-6 , 7-5 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். போட்டி முழுவதும் ஒரு செட்டைக்கூடஇழக்காமல் சின்னர் வெற்றி பெற்றார். ஆனால், அல்காரஸ் உலகத் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தாலும், சின்னர் கோப்பையை வென்றார்.

மறுபுறம், இந்த வெற்றியின் மூலம் அவர் உள்ளரங்கப் போட்டிகளில் தொடர்ச்சியாக 31 போட்டிகளில் தோல்வியடையாத சாதனையையும் தக்கவைத்துக்கொண்டார். ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச்சிற்குப் பிறகு ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி இறுதிப் போட்டிகளிலும் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக இளைய வீரர் என்ற பெருமையையும் சின்னர் பெற்றார். 2025 ஆம் ஆண்டில் பல ஏடிபி இறுதிப் போட்டிகளை வென்ற ஒன்பதாவது வீரர் இவர்தான்.

வெற்றி குறித்து சின்னர், “இது ஒரு அற்புதமான சீசன்... இந்த ஆண்டு நான்கு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளை வென்றது, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது, ஆண்டின் இறுதியில் இவ்வளவு பெரிய தொடரை வைத்திருப்பது என எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் கடந்த ஆண்டைவிட நான் சிறந்த வீரராக இருப்பதாக உணர்கிறேன், இது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இது அனைத்தும் செயல்முறையின் ஒரு பகுதி. நீங்கள் தொடர்ந்து உழைத்து சிறந்த வீரராக முயற்சித்தால், அவற்றின் முடிவுகள் வரும் என்று நான் எப்போதும் கூறுகிறேன், நம்புகிறேன். இந்த ஆண்டு அது இப்படித்தான் இருந்தது. நான் மிகவும் மதிக்கும் வீரர்களில் அல்காரஸும் ஒருவர். அவர் நிறைய முயற்சி செய்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

jannik sinner

சின்னர் வாழ்த்து தெரிவித்துள்ள அல்காரஸ், “சின்னருக்கு இது ஒரு சிறந்த ஆண்டு, இப்போது ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. அடுத்த ஆண்டுக்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால், நான் தயாராக இருப்பேன். உங்களுக்கு எதிராக நான் இன்னும் பல இறுதிப் போட்டிகளில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.