ஜடேஜா - தோனி web
கிரிக்கெட்

அதிக சிக்சர்கள்| தோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6வது டெஸ்ட் சதம் விளாசினார் ரவீந்திர ஜடேஜா.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6வது டெஸ்ட் சதம் விளாசினார் ரவீந்திர ஜடேஜா. அதனுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளினார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

jurel - jadeja

முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி 448 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதம் விளாசி அசத்தினர்.

தோனியை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா..

பரபரப்பாக தொடங்கப்பட்ட முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 162 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்.

jadeja

விண்டீஸை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 286 ரன்கள் முன்னிலையுடன் 448/5 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் 5 சிக்சர்களை விளாசிய ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.

jadeja - dhoni

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:

1. சேவாக் - 90 சிக்சர்கள்

2. ரிஷப் பண்ட் - 90 சிக்சர்கள்*

3. ரோகித் சர்மா - 88 சிக்சர்கள்

4. ரவீந்திர ஜடேஜா - 80 சிக்சர்கள்

5. மகேந்திர சிங் தோனி - 78 சிக்சர்கள்