pakistan former player saeed ajmal recalls cheques of rs 25 lakh bounced
சயீத் அஜ்மல்ராய்ட்டர்ஸ்

ரூ.25 லட்சம் வழங்கிய பிரதமர்.. பவுன்ஸ் ஆன கொடூரம்.. உண்மையை உடைத்த பாகி. Ex வீரர்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், அப்போதைய பிரதமர் தனக்கு ரூ.25 லட்ச காசோலையை வழங்கியதாகவும், ஆனால் அந்தக் காசோலை பவுன்ஸ் ஆனதாகவும் தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
Published on
Summary

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், அப்போதைய பிரதமர் தனக்கு ரூ.25 லட்ச காசோலையை வழங்கியதாகவும், ஆனால் அந்தக் காசோலை பவுன்ஸ் ஆனதாகவும் தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.

துபாயில், சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை, இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் வென்று சாதனைப் பட்டியலில் இணைந்தது. அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சரான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது. இது, விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்து இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தானுக்கு காசோலை வழங்கப்பட்டது. அதை அவ்வணி கேப்டன் மேடையிலேயே வீசியெறிந்த சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலின் பழைய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

2023ஆம் ஆண்டு நாதிர் அலி உடனான பாட்காஸ்டின் கிளிப்பில், 2009 டி20 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு அப்போதைய பிரதமர் யூசுப் ராசா கிலானி தலா 25 லட்சம் பவுண்டுகள் காசோலைகளை வழங்குவதாக உறுதியளித்ததை அஜ்மல் நினைவுகூர்ந்தார். வீரர்கள் வெகுமதியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும், காசோலைகள் பின்னர் பவுன்ஸ் ஆனதை அஜ்மல் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “நாங்கள் வெற்றி பெற்று வீடு திரும்பியபோது, ​​எங்களுக்கு அவ்வளவு பணம் கிடைக்கவில்லை. அப்போதைய பிரதமர் எங்களை அழைத்து ஒவ்வொரு வீரருக்கும் ரூ.25 லட்சம் காசோலையை வழங்கினார். நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது அது நிறைய பணம். இருப்பினும், அந்தக் காசோலை பவுன்ஸ் ஆனது” என அதில் தெரிவித்துள்ளார்.

pakistan former player saeed ajmal recalls cheques of rs 25 lakh bounced
ஆசியக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன்.. கோப்பையை வாங்க மறுப்பு!

அஜ்மலின் கருத்துகள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களை நடத்தும் மாறுபட்ட வழிகள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளன. மேலும், இது இந்திய - பாகிஸ்தான் என இரு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையிலான வீரர் வெகுமதிகளில் உள்ள அப்பட்டமான வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையில் ஏமாற்றமடைந்து ஊதியம் பெறாமல் தவித்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உடனடியாக அதன் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.21 கோடி ரொக்கப் பரிசை அறிவித்தது.

இந்த நிலையில், அஜ்மலின் கருத்துகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள முறையான பிரச்னைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, அங்கு வீரர்கள் பெரும்பாலும் நிர்வாக புறக்கணிப்பு மற்றும் தாமதமான நிதி அங்கீகாரத்தை எதிர்கொள்கின்றனர், இது இந்தியாவின் கட்டமைக்கப்பட்ட பரிசுத் தொகை மற்றும் வலுவான வீரர் ஆதரவு அமைப்புகளுடன் கடுமையாக வேறுபடுகிறது. அதேநேரத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதனால், அது உலக நாடுகளிடம் கடன் வாங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

pakistan former player saeed ajmal recalls cheques of rs 25 lakh bounced
indiax page

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜ்மல், தனது பந்துவீச்சு நடவடிக்கைக்காக ஐ.சி.சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டு அவருடைய கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தபோதும், அவர் இன்றும் நாட்டின் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராகப் பேசப்படுகிறார்.

pakistan former player saeed ajmal recalls cheques of rs 25 lakh bounced
"கிரிக்கெட் தடையிலிருந்து தப்பிவிட்டார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com