2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தியா வென்றால், பிசிசிஐ ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. இது சம ஊதிய கொள்கையின் அடிப்படையில், மகளிர் அணிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசாகும்.
2025 மகளிர் உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன..
இந்தசூழலில் நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையே வெல்லாத இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் முதல் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன..
47 ஆண்டுகளாக உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய மகளிர் அணி, தங்களுடைய முதல் கோப்பையை நோக்கி நாளை விளையாடவிருக்கிறது.. இந்தசூழலில் உலகக்கோப்பையை வெல்லும்பட்சத்தில் இந்திய மகளிர் அணிக்கு மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
மகளிர் உலகக்கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் ஆக பெரும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பெரிய பரிசை அறிவிக்கத் தயாராகி வருகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றால், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு வழங்கப்பட்ட அதே 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை, மகளிர் அணிக்கும் வழங்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
இது வாரியத்தின் சம ஊதிய கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவாகும்.