இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் ட்விட்டர்
கிரிக்கெட்

’காவி’க்கு மாறிய இந்திய வீரர்கள்! - கன்பியூஸ் ஆன ரசிகர்கள்!

Prakash J

இந்தியாவில் 50 ஓவர் 13-வது ஆடவர் உலகக்கோப்பை இன்று (அக்.5) தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி, நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி, கடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அவ்வணியில் தோல்வியுற்றதற்குப் பலனாகப் பழிதீர்த்துக் கொண்டது.

nz win

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய அணிகள், சென்னையில் அக்டோபர் 8-ஆம் தேதி மோத உள்ளன. சென்னைக்கு வந்திருக்கும் இந்திய வீரர்கள் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின்போது, ராகுல் டிராவிட் வீரர்கள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி பல அறிவுரைகளை வழங்கினார். அவர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இந்திய வீரர்கள் அனைவரும் காவி நிற ஜெர்சியை அணிந்துள்ளனர். அதற்கேற்றாற்போல், காவி நிறத்திலேயே தொப்பி அணிந்துள்ளனர்.

இதையும் படிக்க: "மனதளவில் மனைவி என்னை துன்புறுத்துகிறார்”-விவாகரத்து பெற்றார் தவான்! மகனைக் காட்ட நீதிமன்றம் உத்தரவு

இந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கும் நெட்டிசன்கள் சிலர், தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் பலரும் வீரர்கள் அணிந்திருக்கும் உடை மற்றும் தொப்பியை, பாஜகவோடு தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டிருப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியாகிய நிலையில், தற்போது இந்திய வீரர்கள் காவி நிறத்தில் ஜெர்சி மற்றும் தொப்பி அணிந்திருப்பதும் பேசுபொருளாகி இருக்கிறது.

இதில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், நீல நிற தொப்பியை அணிந்து அவர்களில் இருந்து வேறுபட்டுள்ளார்.