புவனேஷ்வர் குமார் pti / screenshot
கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டி: புவனேஷ்வர் உள்ளே.. இந்திய அணி பந்துவீச்சு!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

Rishan Vengai

இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் இன்று தொடங்குகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பெற்றது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் 2024ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என சொந்தமண்ணில் இழந்த இந்தியா, வரலாற்று தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். இந்திய ஆடும் அணியில் புவனேஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆடும் அணி: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்