2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 411 ரன்கள் குவித்த இந்தியா cricinfo
கிரிக்கெட்

2026 U19 உலகக்கோப்பை| இறுதிப்போட்டியில் 411 ரன்கள் குவிப்பு.. வரலாறு படைத்த இந்தியா!

2026 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 411 ரன்கள் குவித்து வரலாறு படைத்துள்ளது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி..

Rishan Vengai

2026 யு19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய யு19 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது.

2026 யு19 உலகக்கோப்பை

ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 411 ரன்கள் குவித்துள்ளது.

411 ரன்கள் குவித்து வரலாறு!

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 80 பந்தில் 15 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் என வானவேடிக்கை காட்டி 175 ரன்கள் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் அதிரடி காட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்களை குவித்தது இந்திய அணி.

வைபவ் சூர்யவன்ஷி

இதன்மூலம் யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 400 ரன்களுக்கு மேல் அடித்த முதல் அணியாக வரலாறு படைத்தது இந்திய அணி. இதற்கு முன் இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 253 ரன்களும், ஒரு யு19 உலகக்கோப்பை பிளேஆஃப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 349 ரன்களும் மட்டுமே நீடிக்கின்றன.

வைபவ் சூர்யவன்ஷி

இதுவரை யு19 கிரிக்கெட்டில் சேஸ்செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கே 311 ரன்களாக இருக்கும் பட்சத்தில் இந்தியா எளிதில் கோப்பை வென்றுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.