ஹர்சித் ரானா
ஹர்சித் ரானாweb

டி20 உலகக்கோப்பை| இந்திய அணியிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்..? மாற்று வீரர் இவர் தான்!

2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on
Summary

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டிக்குத் தயாராகி வருகிறது.

2026 டி20 உலகக்கோப்பை நாளை தொடங்கவிருக்கும் நிலையில், 20 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் 59 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி 51 வெற்றிகள், 8 தோல்விகளுடன் வலிமையாக வருகிறது.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி
சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 அணிweb

சூர்யகுமார் யாதவ் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாடு என அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே இல்லாமல் வெற்றிநடை போட்டுவரும் இந்திய அணியில், சிக்ஸ் ஹிட்டர்கள், ஃபினிசிங் வீரர்கள், தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் என அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தசூழலில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஹர்ஷித் ராணாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

ஹர்சித் ரானா
’புது சரித்திரம்..’ பறந்த 15 சிக்சர்கள்.. FINAL-ல் 175 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி! பிரமாண்ட சாதனை!

ஹர்சித் ராணா விலக வாய்ப்பு..

2026 டி20 உலகக்கோப்பையில் நாளை நடக்கவிருக்கும் முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது இந்திய அணி. இந்தசூழலில் போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடிய போது, வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்சித் ரானா
ஹர்சித் ரானா

இதுகுறித்து கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, "அவர் இன்னும் விலக்கப்படவில்லை, ஆனால் சந்தேகத்திற்குரியவராகத் தெரிகிறார். மாலைக்குள் எங்களுக்குத் தெரியும். புதன்கிழமை மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது, ஆனால் நிலைமை அவ்வளவு ஊக்கமளிக்கவில்லை" என்று முதல் போட்டிக்கு முன்னதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

இந்தசூழலில் ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹர்சித் ரானா
“எங்கு விளையாடினாலும்.. இந்த பையன் மிரட்டுகிறார்..” - சூர்யவன்ஷியை பார்த்து மிரண்ட ஆஸ்திரேலியா வீரர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com