தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா தடுமாற்றம் cricinfo
கிரிக்கெட்

2வது டெஸ்ட்| 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்.. தோல்வியின் பக்கம் இந்தியா!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி..

Rishan Vengai

குவஹாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 105 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். ஹார்மர் மற்றும் யான்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா தோல்வியின் பக்கம் நகர்கிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது..

இந்தியா - தென்னாப்பிரிக்கா

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்களை அடிக்கமுடியாமல் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி தொடரை வெல்லும் நோக்கில் இரண்டாவது போட்டியில் விளையாடிவருகிறது..

குவஹாத்தியில் தொடங்கி நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, சேனுரான் முத்துசாமியின் 109 ரன்கள் மற்றும் மார்கோ யான்சனின் 93 ரன்கள் ஆட்டத்தால் 489 ரன்கள் குவித்தது..

இந்நிலையில் 3வது நாளில் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 122 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்து வெளியேறினார்.. பேட்டிங்கில் 93 ரன்கள் அடித்த யான்சன் பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்..