aus. vs ind. captains x page
கிரிக்கெட்

ஆஸி. எதிராக தொடரைக் கைப்பற்றுமா இந்தியா.. இன்று கடைசி டி20!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது.

Prakash J

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து, மெல்போர்னில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து, கான்பெர்ராவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், கோல்டுகோஸ்டில் நடைபெற்ற 4-வது ஆட்டத்திலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது.

india

இந்திய அணி தொடரை வெல்ல தீவிரம் காட்டும் நிலையில், ஆஸ்திரேலிய அணி சமன் செய்து ஆறுதல் தேடிக்கொள்ள போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. பொதுவாக பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது. ஆனால், கணித்து ஆடினால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்க்கலாம். பிரிஸ்பேனில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்க இருக்கிறது.