இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் தரம்சாலாவில் இன்று தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் ODI போட்டி தாமதமாகியுள்ளது. மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டத்திற்கு டாஸ் கூட நடத்த முடியாமல் உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அசத்தியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. இரண்டு அணிகளும் மோதவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி பகல் 1.30 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் நடக்கவிருந்தநிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இன்னும் நிற்காததால் டாஸ் போடாமல் இருந்துவருகிறது. இந்தப்போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.