சென்னை சேப்பாக்கம் மைதானம் Twitter
கிரிக்கெட்

நாளை IND - ZIM மோதல்.. புது பிட்ச் உடன் சென்னை மைதானம்.. இந்தியாவுக்குச் சாதகமா?

சூப்பர் 8 பிரிவின் இந்திய அணியின் 2ஆவது போட்டி, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Prakash J

சூப்பர் 8 பிரிவின் இந்திய அணியின் 2ஆவது போட்டி, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும் ஜிம்பாப்வேவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தச் சூழலில், சென்னை மைதானத்தின் பிட்ச் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வியை அடைந்தது. இதனால், அதன் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு போட்டிகளுக்கு எதிராக இந்திய அணி மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சூப்பர் 8 பிரிவின் இந்திய அணியின் 2ஆவது போட்டி, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும் ஜிம்பாப்வேவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இந்தச் சூழலில், சென்னை மைதானத்தின் பிட்ச் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சேப்பாக்கம் மைதானம்

பொதுவாக, சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான, சற்று மெதுவான ஆடுகளமாகவே அறியப்படும். ஆனால், நாளை நடைபெறும் போட்டியில் முற்றிலும் புதிய பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பந்து பேட்டிற்கு மிக எளிதாக வரும் எனவும், இது பேட்டர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தால், இந்திய அணி அதிக ரன்களை குவித்து ரன் ரேட்டை உயர்த்தும் என நம்பப்படுகிறது.