சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை.. என்ன காரணம்..? மைதான நிர்வாகம் விளக்கம்!
சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளே விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஏற்கனவே, மைதானத்தில் தூக்கி எறிய வாய்ப்பு இருக்ககூடிய வாட்டர் பாட்டில், பவர் பேங்க், குடை உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்கனவே, மைதானத்திற்கு கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் விசிலும் இணைந்திருக்கிறது. மேலும், மைதானத்தை சுற்றியுள்ள சாலையோர விற்பனைக் கடைகளிலும் விசில்களை விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் இருந்து வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில், இந்த விசில் தடைக்கும் ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த ஒரு சமந்தமும் இல்லை என்று சேப்பாக்கம் மைதான நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்லோகனாக “விசில் போடு” பாடல் இருக்கிறது. மேலும், சிஎஸ்கே போட்டிகளின் போது விசில் பாடல் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப்பாடல் போடப்படும். இந்த நிலையில் தான், விசில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் கொண்டுவர தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையத்தால் விசில் விசில் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக, சேப்பாக்கம் மைதானத்தில் விசில் தடை செய்யபட்டிருக்கிறதா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது.

