ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிரோபிக்கான அட்டவணையானது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெவ்வேறு நிலைபாட்டால் நீண்டகாலமாக அறிவிக்கப்படாமலே இருந்துவந்தது.
பாகிஸ்தானுக்கு சென்று விளையாடமாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததையடுத்து, நீண்டகால பேச்சுவார்த்தைக்கு பிறகு ஹைப்ரிட் முறைப்படி பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகள் நடத்தப்படும் என்ற முடிவு எட்டப்பட்டது. ஆனால் ஐசிசியின் இந்தமுடிவுக்காக பாகிஸ்தான் அணியும் சில நிபந்தனைகளை முன்வைத்து சாதகமாக்கிக்கொண்டது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிரோபிக்கான 9வது சீசனின் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டிகள் ஹைப்ரிட் முறைப்படி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிரோபியானது பிப்ரவரி 19ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கின்றன.
குரூப் ஏ - பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம்
குரூப் பி - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
மார்ச் 9-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு இரண்டு மைதானங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் போட்டியானது துபாயில் நடத்தப்படும், அப்படி இல்லை என்றால் பாகிஸ்தானில் லாகூர் மைதானத்தில் நடத்தப்படும்.
சாம்பியன்ஸ் டிரோபி தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 19 அன்று பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. இந்தியா பிப்ரவரி 20-ம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் ஆட்டமானது பிப்ரவரி 23-ம் தேதி துபாயில் நடக்கவிருக்கிறது.
முழு போட்டி அட்டவணை:
பிப்ரவரி 19: பாகிஸ்தான் v நியூசிலாந்து - கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 20: பங்களாதேஷ் v இந்தியா - துபாய்
பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா - கராச்சி, பாகிஸ்தான்
பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து - லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 23: பாகிஸ்தான் v இந்தியா, துபாய்
பிப்ரவரி 24: பங்களாதேஷ் v நியூசிலாந்து - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து - லாகூர், பாகிஸ்தான்
பிப்ரவரி 27: பாகிஸ்தான் v பங்களாதேஷ் - ராவல்பிண்டி, பாகிஸ்தான்
பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா - லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 1: தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து - கராச்சி, பாகிஸ்தான்
மார்ச் 2: நியூசிலாந்து v இந்தியா - துபாய்
மார்ச் 4: அரையிறுதி 1 - துபாய்
மார்ச் 5, அரையிறுதி 2 - லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 9 - இறுதிப் போட்டி - லாகூர் (இந்தியா தகுதி பெறாவிட்டால், அது துபாயில் விளையாடப்படும்)
இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டேவாக மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப்போட்டிகளுக்கும் ரிசர்வ் நாட்கள் இருக்கின்றன. அனைத்து போட்டிகளும் பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.