ஹர்திக் பாண்டியா - முரளி கார்த்திக் web
கிரிக்கெட்

மைதானத்திலேயே காரசார வாதம்.. ஹர்திக் பாண்டியா vs முரளி கார்த்திக் மோதலா? Viral Video

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது..

Rishan Vengai

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டிக்கு முன்பு, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கும் முன்னாள் வீரர் முரளி கார்த்திக்குக்கும் இடையே மைதானத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் விவாதத்தின் காரணம் தெரியவில்லை.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நியூசிலாந்து அணி 209 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தாலும், இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 15.2 ஓவரிலேயே எளிதாக வெற்றிபெற்றது இந்திய அணி. 32 பந்தில் 76 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ishan kishan

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஞாயிற்று கிழமையான நாளை இரண்டு அணிகளுக்கும் இடையே 3வது டி20 போட்டி நடக்கவிருக்கிறது. நாளைய போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முனைப்பிலும் களமிறங்கவிருக்கின்றன.

ஹர்திக் பாண்டியா - முரளி கார்த்திக் மோதல்..

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான 2வது டி20 போட்டிக்கு முன்பு மைதானத்தில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவிற்கும், இந்திய முன்னாள் வீரரும் தற்போதைய தொடரின் தொகுப்பாளருமான முரளி கார்த்திக்கிற்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. வீடியோவில் வார்த்தை பரிமாற்றத்திற்கான ஆடியோ கேட்கவில்லை என்றாலும், எப்போதும் அமைதியாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் முகம் இயல்பானதாக இல்லை.

தன்னுடைய விமர்சனங்களில் கராராக இருக்கும் முரளி கார்த்திக் என்ன கருத்து சொன்னார் என்பது புரியவில்லை. ஆனால் இரண்டு பேருக்கும் இடையே காரசாரமான வாதம் சென்றது வீடியோவில் தெரிகிறது. தற்போது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.